ஜேர்மனியில் 9,000 ஆப்கன் அகதிகள் அமெரிக்க இராணுவ தளங்களில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்க இராணுவத் தளங்களில் சிக்கித் தவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆப்கன் நாட்டவர்களில் சிலருக்கு மண்ணன் (measles) என்னும் அம்மை நோய் காணப்பட்டது தெரியவந்ததையடுத்து, அமெரிக்கா விமான தளங்களிலிருந்து ஆப்கன் நாட்டவர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதை நிறுத்தியது. இதனால்
இதனால், ஜேர்மனியின் Ramstein மற்றும் Kaiserslautern ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவதளங்களில் மீதமுள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது ஜேர்மனியில் அமெரிக்க விமான தளங்களில் தங்கியிருப்போருக்கு மண்ணன், தட்டம்மை, ரூபெல்லா மற்றும் சின்னம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.