“உலகத்திற்கு இதுவே எங்கள் கடைசி செய்தியாகவும் இருக்கலாம்”- உக்ரைன் இராணுவதி தளபதி உருக்கம்

354 Views

உக்ரைன்  நாட்டின் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் இராணுவத்தினர் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடு முடிந்தும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்நிலையில், உக்ரைன் மேரியோபோலில் உள்ள 36வது கடற்படைத் தளபதி செர்ஹி செர்வேலி வெளியிட்டுள்ள வீடியோவில், “எங்களிடம் போர்க் கருவிகள், பொருட்கள் குறைவாக உள்ளன. ஆனால், எங்கள் மக்களுக்கு மன உறுதி அதிகமாக இருக்கிறது.

ஆனால், ரஷ்ய படை எங்களை விட பன்மடங்கு பெரிதாக இருக்கிறது. அவர்கள் வான் வெளியிலும் தரையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே, உலகத்திற்கு இதுவே எங்கள் கடைசி செய்தியாகவும் இருக்கலாம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply