இலங்கையில் 3 வகை டெல்டா வைரஸ் பரவுகின்றன- அமைச்சர் சன்ன ஜயசுமன

437 Views

AstraZeneca இலங்கையில் 3 வகை டெல்டா வைரஸ் பரவுகின்றன- அமைச்சர் சன்ன ஜயசுமன

டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த  தகவலைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் மேலும் சில கொரோனா வைரஸ் பிறழ்வுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும்  சன்ன ஜயசுமன கூறினார்.

SA, 222V SA 701S மற்றும் SA 1078S ஆகிய புதிய டெல்டா திரிபுகள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply