மக்கள் துன்பத்தின் பிடியில் வாழ்கின்றனர். தெருக்களில் விழுந்து சாகும் மக்களை இந்த நாடு சந்திக்கின்றது என சபையில் உரையாற்றுகையில் பாராளுன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இவ்வாறானதொரு சூழ்நிலை வரும் என்று ஏற்கனவே சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் இந்த அரசு இது வரையில் அதற்கு செவி கொடுக்கவில்லை.
இலங்கையில் ஏற்றப்படும் சில கொரோனா தடுப்பு ஊசிகளை 15க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இலங்கையில் இருந்து அவ்வாறான நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பவர்கள் தமது வெளி நாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
அத்துடன் இந்த நாட்டில் சரியான சட்டமில்லை. ஒரு நியாயமான சட்டத்தின் படி இவ்வாறான செயற்பாடுகள் கையாளப்படுவதில்லை. இராணுவம் அறிவிப்பதுதான் கொரோனா சட்டம் என்று இந் நாட்டின் நிலை உள்ளது” என்றார்.