சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இன்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடன் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
COVID-19 ஒழிப்பு பணிகள், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.