“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை”-கின்னஸ் உலக சாதனை அமைப்பும் தகவல்

131 Views

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும்(Guinness World Records) பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று ‘திங்கள்’ சோகம் பகிரப்பட்டது.

“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Reply