கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாழிகையின் ஒவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பிற்கும் உக்ரைன் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கிக்கும் இடையில் இடம்பெற்ற காரசாரமான வாக்குவா தத்தை தொடர்ந்து உக்ரைனுக்கான ஆயுத வினியோகத்தை நிறுத்திய அமெரிக்கா தற்போது உக்ரைனுக்கு வழங்கப்படும் புலனாய்வுத் தக வல்களையும் நிறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏயின் தலைவர் ஜோன் ரட்கிளிப் கடந்த புதன் கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த செலன்ஸ்கி, கனிமவள உடன் பாட்டிலும் கையொப்பமிட மறுத்தபோது ஏற்பட்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து வெள்ளை மாளி கையில் இருந்து அவரும் அவரின் அணியினரும் வெளியேற்றப்பட்ட னர். வெளியேற்றப்பட்ட உக்ரைன் அதிபருக்கு ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும் அடைக்கலம் கொடுத்த போதும் அமெரிக்கா தனது அழுத்தத்தை இறுக்கி வருகின்றது.
ட்றம்பின் உத்தரவைத் தொடர்ந்து போலந்து எல்லைகளில் இருந்து ஆயுதங்கள் வினியோக பணி நிறுத்தப்பட்டுள்ளதை போலந் தின் பிரதமர் Donald Tusk உறுதிப்படுத்தியுள்ளார். Jasionka வான்படைத் தளத்தின் ஆயுதக் களஞ் சியத்திற்கு அமெரிக்கா நேரிடையாகவே உத் தரவுகளை வழங்கியுள்ளது., ரஸ்யா மீதான பொருளாதாரத் தடையையும் அமெரிக்கா நீக்கலாம், நிலமை மிகவும் தீவிரமானதாக மாறி வருகின்றது. ஆயுத வினியோகம் நிறுத்தப்படுவது தொடர்பில் நேட்டோவுக்கு கூட தெரியப் படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா புனாய்வுத் தகவல் களை நிறுத்தியதை உக்ரைன் தரப்பு உறுதிப்படுத்தி யுள்ளதுடன், அமெரிக்காவின் இந்த அறிவித்தலைத் தொடர்ந்து தாம் பேச்சுக்கு தயார் எனவும், தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றிற்கு உடன்படுவதாகவும் கடந்த செவ்வாய்க் கிழமை(4) உக்ரைன் அரச தலைவர் வொலமிடீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.