இந்த வருடத்தில் சாதனை படைத்த ரஸ்ய நாணயம்

225 Views

சாதனை படைத்த ரஸ்ய நாணயம்

உலகில் உள்ள 31 முன்னணி நாடுகளின் நாணயங்களை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டில் மிகவும் சிறப்பாக முன்னேறிவரும் நாணயமாக ரஸ்யாவின் ரூபிள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புளும்பேர்க் எனப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொருளாதார ஆய்வு ஊடகம் கடந்த புதன்கிழமை(11) தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபிள் நாணயம் இந்த வருடத்தில் 11 விகித உயர்வை சந்தித்துள்ளது. அனைத்துலக சந்தையில் அது 12 விகித உயர்வை எட்டியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (12) அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபிளின் பெறுமதி 64 ஆக உயர்ந்திருந்தது இது கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட அதி உயர் அதிகரிப்பாகும். அது பிறேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளின் மிகவும் வலிமையான நாணயங்களையும் பின் தள்ளியுள்ளது. அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரோ நாணயம் 5 வருடம் காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி மாதம் மேற்குலக நாடுகள் கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளினால் அதிக வீழ்ச்சி அடைந்த ரூபிள் நாணயம் தற்போது மிக வேகமாக முன்னேறிவருகின்றது.

Tamil News

Leave a Reply