திறமையானவர்களை உரிய பதவிகளிற்கு நியமிக்காததே நாட்டின் இன்றைய நிலைமைக்கு காரணம் – மத்திய வங்கி ஆளுநர்

283 Views

முக்கிய பதவிகளிற்கு திறமையான கற்றவர்களை குறிப்பிட்ட  காலத்திற்கு நியமித்திருந்தால் பொருளாதாரம் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என  மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாத்தள ராகுல கல்லூயில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிய பதவிகளிற்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குஅவர்கள் பதவியில் இருந்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு சென்றிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய பதவிகளிற்கு பொருத்தமானவர்களை நியமித்தால் மூன்றாம் உலக நாடுகள் குறிப்பிட்ட அளவு அபிவிருத்தியை அடைவது சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகுதியானவர்கள் திறமையானவர்கள் தங்கள் திறனை பயன்படுத்த முடியாத நாட்டின் அபிவிருத்தி மாதிரி வெற்றிபெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை நாடு மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்கின்றது,தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவான காரியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும் அவ்வாறான முடிவுகள் எப்போதும் மக்கள் ஆதரவை பெற்றவையாக விளங்காது சில  குழுக்களின் அதிருப்தியை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply