இலங்கையில் மேலும் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 98 பேரில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இது வரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.