ஜெருசலேமில் நடைபெற்ற ‘முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்’ உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டிவிடுவதாகவும், செளதி அரேபியாவின் மீதும் செல்வாக்கு செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் நஃப்தாலி கூறினார்.
இஸ்ரேலுக்கு துருக்கி ஒரு புதிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பதாகவும் பென்னட் இந்த மாநாட்டில் எச்சரித்துள்ளார்.



