சீன இராணுவ சீருடை விவகாரம்: நிறுவன சீருடையே அது என்று தூதரகம் விளக்கம்

10 1 சீன இராணுவ சீருடை விவகாரம்: நிறுவன சீருடையே அது என்று தூதரகம் விளக்கம்சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த உடையை திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தினர். இது குறித்து பாதுகாப்பு செயலர் எழுப்பிய கேள்விக்கு “புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் சீருடையின் ஒரு பகுதியே அது” என்று சீனத் தூதரகம் பதில் அளித்துள்ளது.

சீன இராணுவ சீருடையை ஒத்த உடையுடன் வெளிநாட்டினர் திஸ்ஸமஹராமவில் இருப்பது குறித்து எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண சீன தூதரகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அத்துடன், இதுபோன்ற செயல்பாடுகள் இனி நிகழாமல் பார்க்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சீனத் தூதரகம் அந்த ஆடை புனரமைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் சீருடையே அது என்று விளக்கமளித்துள்ளது.