இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்று அழைக்கப்படும்-தலிபான் அறிவிப்பு

92 Views

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்: ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும்  தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின்  செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இடைக்கால அரசில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம்:

பிரதமர் – முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தலிபான் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்)

துணை பிரதமர்கள் – முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி

உள்துறை – சிராஜுதீன் ஹக்கானி (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் – இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது)

பாதுகாப்பு – முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்)

வெளியுறவு – மெளலவி ஆமிர் கான் முட்டாக்கி

நிதி- முல்லா ஹிதாயத் பத்ரி

நீதித்துறை – அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி

தகவல் துறை – கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply