அரசு உடனே பதவி விலகி தேர்தலை நடத்தவேண்டும்; சஜித் வலியுறுத்து

166 Views

அரசு உடனே பதவி விலகி தேர்தலை நடத்தவேண்டும்“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனே பதவி விலகி தேர்தலை நடத்தவேண்டும். அரசு மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. எனவே, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, உடனடியாக அரசு பதவி விலகி தேர்தலொன்றை நடத்த வேண்டும்” என இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வலியுறுத்தினார்.

தேர்தலொன்றை நடத்தினால்தான் நாட்டை யார் ஆட்சி புரிய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. எவ்வாறாயினும் நாட்டை வழிநடத்த எதிர்க்கட்சியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தற்போதைய அரசின் பொறுப்பற்ற, திறமையற்ற மற்றும் முறையான கொள்கை இல்லாமையே நாடு நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கிச் செல்வதற்குச் காரணமாகும். இந்த அரசுக்கு நாட்டை மீட்டெடுப்பதற்கான திறன் இல்லை” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply