ஒட்டுமொத்த அரசையும் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் – மனோ கணேசன்

106 Views

ஒட்டுமொத்த அரசை கொளுத்தி வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்

“விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசை கொளுத்தி வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.”என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பொகவந்தலாவையில்  அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன்   இவ்வாவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்குக் கடன் கொடுத்தன. அந்த நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யப்போவதாக அறிவித்துவிட்டு மஞ்சளுக்குத் தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. இந்த விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது” என்றார்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad ஒட்டுமொத்த அரசையும் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் - மனோ கணேசன்

Leave a Reply