கொரோனா பேரவலம் தொடர்கிறது; மேலும் 215 பேர் தொற்றினால் உயிரிழப்பு

433 Views

கொரோனா பேரவலம் தொடர்கிறதுகொரோனா பேரவலம் தொடர்கிறது: இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்டு வரும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 215 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் (ஓகஸ்ட்-31) கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் உயிரிழந்தவர்களில் 100 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply