அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது! தீர்வு கிட்டும்வரை போராட்டம்; ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

373 Views

அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாதுஅமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது: சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம். உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும், செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், சம்பள அதிகரிப்பை வரவு செலவுத் திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப் படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியவை வருமாறு:-

எம்மால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கைகளை அமைச்சரவை உப குழு ஏற்கவில்லை. உரிய வகையில் தீர்வு திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. அமைச்சரவையால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்கமுடியாது. சுபோதினி அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஒரே தடவையில் தீர்வு அவசியம்.

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட எதிர் பார்க்கின்றோம். எனவே, சந்திப்புக்கான நேரத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply