பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கும்-பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட

One Year Later | One Year Later: Two developments over the past year caused  serious setbacks to Sri Lanka's democracy. One was the president's  violation of the... | By Groundviews | Facebookபொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவித்த  பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட  நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை மக்கள்  நலிந்தவர்கள் உழைக்கும் மக்கள் தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது என்று    தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான சமூக நெருக்கடிகள் உருவாகும் என தெரிவித்துள்ள பேராசிரியர்  ஆளும் உயர்குழாம் இதனால் நாட்டில் நெருக்கடி நிலையேற்படும் என்பதை அறிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது அதற்காக தயாராகின்றனர் அதில் ஒன்றுதான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தரப்பு தற்போது மக்களால் முன்னெடுக்கப்படும்  ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க விரும்புகின்றது.  அதிருப்தியாளர்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.