பயங்கரவாதிகளை நினைகூர அனுமதியில்லை- ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிப்பு

388 Views

பயங்கரவாதிகளை நினைகூர அனுமதி

பயங்கரவாதிகளை நினைகூர அனுமதிக்க முடியாது யுத்தத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தால் அவரை தனிப்பட்ட முறையில் நினைவுகூரலாம் என ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மனிதஉரிமை குழுக்கள் மனித உரிமை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் தீர்மானங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர் எம்எம்டீ நவாஸினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 2021 ஜனவரியில் ஜனாதிபதி மனித உரிமைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறல்கள் மற்றும் அதுபோன்ற பாரதூரமான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த குழுவை நியமித்திருந்தார்.
இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை ஏற்கனவே கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகியிருந்தது.

கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் யுத்தத்தை எதிர்கொண்ட 75 பேரின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆணைக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

இரண்டவாது அறிக்கை 107 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியாகியுள்ளது.

2015 இல் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் வழக்குதாக்கல் செய்யுமாறும் அல்லது இழப்பீட்டினை வழங்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மக்கள் பொருளாதார ரீதியில் எழுச்சி பெறுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவு அவசியம் என தெரிவித்துள்ளனர் ஆணைக்குழு அந்த பரிந்துரைகளை பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு இடமளிக்க கூடாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் யுத்தத்தில் எவராவது உயிரிழந்தால் உயிரிழந்தவர்களை தனியாக நினைவுகூரலாம் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏஎச்எம்டிஎ நவாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply