ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சசங்க சம்பத் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.