எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்

291 Views

மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணம், தெல்லிப்பழை – யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இன்று மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் முறையற்ற நிதி-நிர்வாக செயற்பாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 300-க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் சம்மேளனங்கள் இணைந்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மனித்துள்ளன.

இப்போராட்டத்துக்கான  ஆதரவை ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பெற்றோல் விலையேற்றத்தை கண்டித்து இன்று மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்று தெல்லிப்பழை – யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply