இலங்கையில் எரிபொருள் விநியோகிப்பதில் சிக்கல் – களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

287 Views

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கையினை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் எரிபொருள் வாகனங்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டா அரசுக்கு எதிராக இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்தே இவ்வாறு இராணுவத்தினரது பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply