தொல்பொருள் ஆராய்ச்சியில் அனைத்து இனத்தவரும் பங்கு கொள்ள வழி செய்க

கிழக்கின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்குமான செயலணியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த கல்விமான்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியக் கலாநிதி கே.ரி. சுந்தரேசன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்

இலங்கையில் கொவிட் 19  கொவிட் நுண்கிருமியை கட்டுப் படுத்துவதில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

கிழக்கின் தொன்மையான இடங்களின் கலாசாரா விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கையின் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகின்றோம். எமது தாய்நாட்டின் பாரம்பரியத்தைப் பேணவும், விசேடமாக இயற்கை வளங்களையும், தொன்மைப் பாரம்பரியங்களையும் பேண விழையும் தங்கள் முயற்சிகளையும் நாம் வரவேற்கின்றோம்.

எனினும், பல் இன, பல் மொழி, பல் மத, பல் கலாசார நாடான இலங்கையில் இந்த நோக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்ட செயலணி அனைவரையும் உள்வாங்கியதாக அமைவதே நல்லது என நாம் நினைக்கின்றோம். இந்த வேளையிலே, இந்தப் பிராந்தியத்தின் தொல்பொருள் ஆரய்ச்சியில் கிழக்குப் பல்கலைக் கழக அறிஞர்கள் ஏலவே தம்மை ஈடுபடுத்தி உள்ளார்கள் என்ற தகவலை தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆகவே, இந்தச் செயலணியில் மேலே குறிப்பிட்ட அனைத்து வகையினரையும் சேர்ந்த கல்விமான்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களை இணைத்துக் கொள்வதே சிறந்தது எனக் கருகின்றோம்.

இதன் மூலம் எமது நாட்டில் நாம் அடையத் துடிக்கும் இன நல்லிணக்கத்தை எட்டலாம். இந்தச் செயலணியில் அனைத்துத் தரப்பினரையும் இணைப்பதன் ஊடாக எம்மைப் பெருமை கொள்ளச் செய்வீர்கள். – என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதுIMG 5609 தொல்பொருள் ஆராய்ச்சியில் அனைத்து இனத்தவரும் பங்கு கொள்ள வழி செய்க