ஆசிரியர், அதிபர்களின் போராட்டம் தொடர்கின்றது

166 Views

6fe17ed0 08dc45ab 84a2c1b7 joshep stalin ஆசிரியர், அதிபர்களின் போராட்டம் தொடர்கின்றது

Online கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர்கள் இன்று 18 ஆவது நாளாகவும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையால் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கின்றதாக தெரிவிக்கப் படுகின்றது. கடந்த 24 வருடங்களாக நிலவும் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாத பட்சத்தில், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply