படையினருக்காக நிலம் அபகரிக்க முயற்சி -வட்டுவாகலில் பதற்றம்

185 Views

21 6102321db77ca படையினருக்காக நிலம் அபகரிக்க முயற்சி -வட்டுவாகலில் பதற்றம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள வட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணி அளவீட்டிற்காகச் சென்ற நிலஅளவைத் திணைக்களத்தினரை மக்கள் வழிமறித்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இதே வேளை அங்கு பெருமளவான காவல் துறை மற்றும் படையினரும் குவிக்கப் பட்டிருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் எனப் பெருமளவானோர் அங்கு திரண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற் படையினரும் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply