ஊதியப் பற்றாக்குறையே சிறுவர்கள் வீட்டு வேலைக்குச் செல்லக் காரணம்-  மனோ

176 Views

கணேசன் 1 ஊதியப் பற்றாக்குறையே சிறுவர்கள் வீட்டு வேலைக்குச் செல்லக் காரணம்-  மனோ

வாக்குறுதியளிக்கப்பட்டது போல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ம் ரூபாவை சம்பளமாக வழங்காத காரணத்தினாலேயே மலையக சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்குச் செல்கின்றனர் என  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம் பெற்ற ஹிஷாலினி மரணத்திற்கு பின்னால் அரசாங்கம் ஒழிந்து கொள்ள முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், போதியளவு ஊதியம் இன்மையால் மலையகத்தில் அதிகரித்து வரும் வறுமையின் காரணமாகவே அங்குள்ள சிறுவர்களும் பெண்களும் வீட்டு வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். எனவே இது குறித்து அரசாங்கம்  உடனடியாகத் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 1000ம் ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply