பொதுத் தளத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பணியாற்றவே அழைக்கப்பட்டுள்ளனர் -ரெலோ

 பொதுத் தளத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பணியாற்றவே அழைக்கப்பட்டுள்ளனர் -ரெலோ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத் தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காக கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ  கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத் தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், கொழும்பில் கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர் மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021  பொதுத் தளத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பணியாற்றவே அழைக்கப்பட்டுள்ளனர் -ரெலோ

Leave a Reply