562 Views
அறச்சலூரில் இலங்கை அகதிகள் முகாமைச் சேரந்தவர்கள் காவல்துறையினரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே இலங்கை அகதிகள் முகாம் 1990ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனார.
இந்த அகதிகள் முகாமைச் சேர்ந்த ரெபிக்சன், விதூசன், ஆண்டனி மகன் ரெபிக்சன் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 6ஆம் திகதி அறச்சலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், 3 இளைஞர்கள் மீதும் காவல்துறையினர் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.