எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் கைது

89 Views

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படகு ஒன்றையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவர்களை மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் ஊடக இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply