இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறல்- தமிழக மீனவர்கள் கைது

116 Views

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக இழுவைப்படகு ஒன்றினையும் அதில் இருந்த 9 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் கட்டளைக்கு அமைவாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே இவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இவர்களை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடு தொடர்பில் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர்,கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு முல்லதைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தெரியப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply