பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

138 Views

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் போராட்டங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply