விக்னேஸ்வரனுடன் தமிழக பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை இன்று சந்திப்பு

விக்னேஸ்வரனுடன் அண்ணாமலை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை இன்றையதினம் (03) சந்தித்தார்.

யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானும் இணைத்திருந்தார்.

Tamil News