சர்வதேச ஊடக சுதந்திர தினம்- மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினம்

சர்வதேச ஊடக சுதந்திர தினம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம்   நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஊடக கடமையின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கைகளில் மெழுகுதிரி ஏந்திய ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Tamil News