இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உருவப்படம் காலி முகத்திடல் போராட்ட களத்தில்

277 Views

இசைப்பிரியாவின் புகைப்படம் காலிமுகத்திடலில்

கொழும்பு -காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில், தமிழர் பிரதேசத்தில் 2009ம் ஆண்டு நடைபெற்ற தமழின அழிப்பின் போது இலங்கை அரச படைகளால்  படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி பதாகை காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply