ஆப்கானில் போராட்டம் நடத்திவரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

போராட்டம் நடத்திவரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

ஆப்கானில் போராட்டம் நடத்திவரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் மாசர் ஐ ஷாரிப் நகரத்தில் தங்களுக்கான உரிமைகள் வேண்டி பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த  தலிபான்கள் அவர்களைச் சாட்டையால் தாக்கினர்.  இதனால் பெண்கள் அங்கிருந்து  வெளியேறினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலிபான்கள் ஆதரவுக் கூட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி,  தலிபான்கள் கலந்துகொள்ள வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி பரதார் துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார்.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021