வெளிப்புற முயற்சிகளால் இலக்குகளை அடைய முடியாது; பச்சலெட்டின் அறிக்கையை நிராகரித்து பீரிஸ் உரை

287 Views

பச்சலெட்டின் அறிக்கையை நிராகரித்து பீரிஸ் உரை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரித்து பீரிஸ் உரை. நேற்று 48 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில், இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு அடியோடு நிராகரித்துள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கைக்கு இலங்கை அரசின் சார்பில் இன்று பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தீர்மானம் 46/1ஆல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சி களுக்கான முன்மொழிவை நாங்கள் நிராகரிக்கும் அதே நேரத்தில் சம்பந் தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுகின்றன.

தீர்மானம் 30/1 இனால் நாங்கள் அனுபவித்தபடி இது எமது சமூகத்தைத் துருவப்படுத்திவிடும். ஐ.நா. மனித உரிமைகள் சபை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்பதுடன் அது அரசியல் மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply