அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக மாற்றிய தலிபான்கள்

விமானங்களை ஊஞ்சலாக மாற்றிய தலிபான்கள்

விமானங்களை ஊஞ்சலாக மாற்றிய தலிபான்கள்: ”பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் இராணுவ தளவாடங்களும். தலிபான்கள் அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்க இராணுவம் விட்டு சென்ற இராணுவத் தளவாடங்களை  தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றை தலிபான்கள்  பொம்மை போல் பாவித்து விளையாடும்  காணொலி ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே  அமெரிக்காவை சீனா தொடர்ந்து விமர்சித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021