அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள்

232 Views

உக்ரைனை ஆதரியுங்கள்

உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர்,

ரஷ்யாவின் போர்  உக்ரைனுக்கு  எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது – ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் .

“உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால்  உக்ரைனை ஆதரியுங்கள், சுதந்திரத்தை ஆதரிக்கவும், எங்களுடைய வாழ்க்கையை ஆதரிக்கவும் வாருங்கள்” என்று ஸெலென்ஸ்கி   அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply