மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் நாளை பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் விவகாரத்துறை அமைச்சர் முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) தெரிவித்துள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை தாம் தலைமை ஏற்றுள்ள பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் தமது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக அமைச்சர் முஹமட் ரிட்சுவான் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது.