21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு கோரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது. அது தற்போது 24 ஆக குறைந்துள்ளது. அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏ330-200 அல்லது ஏ330-300 இரகங்களைச் சார்ந்த 10 ஏர்பஸ்களையும், ஏ320 அல்லது ஏ321 இரகங்களைச் சார்ந்த 11 ஏர்பஸ்களையும் 6 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.