இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது-ஆய்வாளர் அலன் கீனன்

இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதால் இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களை ஜனாதிபதி மேலும் அதிகரித்துள்ளதால் இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது என அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அரசியல் எதிராளிகளை தன்னிச்சையான பக்கச்சார்பான செயற்பாடுகள் மூலம் இலக்கு வைக்குகின்றது, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை சட்டபூர்வமாக்குகின்றது எனவும் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.


ilakku-weekly-epaper-150-october-03-2021