வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் 17 வயது நிரம்பிய சிறுவன் ஒருவரை காணவில்லை. அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிறுவனை காணவில்லை. எனவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறும் குறித்த சிறுவனின் தந்தை வவுனியா காவல் நிலையத்தில் இன்று (08) அதிகாலை முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவன் நேற்று (07) காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை . எனவே அவரைக்கண்டு பிடித்துத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்