இலங்கை, வங்கதேசத்திலிருந்து குடியேறிகளை ஐரோப்பியாவுக்கு கடத்தும் செயலில் ஈடுபட்ட 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.
இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்பட்ட நபர் Serifontaine எனும் பிரான்ஸ் கிராமத்தில் மளிகைக்கடைநடத்திக்கொண்டு ஆட்கடத்தும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு நான்காண்டுகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இவர் இலங்கை, வங்கதேசத்திலிருந்து ஐரோப்பியாவுக்குள் குடியேறிகளை அழைத்து வருவதற்கான விலையைநிர்ணயித்து, பாதையை முடிவு செய்பவராக இருந்திருக்கிறார். கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து உக்ரைன் வழியாக குடியேறிகளை அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள மற்றொரு குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்ஏற்கனவே நாடுகடத்தப்படுவதற்கான பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இலங்கையர்களுக்கு இதைவிட குறைவான சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் கணக்குப்படி, கடந்த 2022ம் ஆண்டு ஐரோப்பியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து ஆங்கிலகால்வாய் வழியாக 45 ஆயிரம் குடியேறிகள் இங்கிலாந்தை அடைந்திருக்கின்றனர். 2021ம் ஆண்டுடன்ஒப்பிடுகையில் கூடுதலாக 17 ஆயிரம் குடியேறிகள் இங்கிலாந்தை அடைந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.