வழக்கில் தோல்வியடைந்த இலங்கை தமிழ் அகதி: 9000 டொலர்கள் கட்டணத்தை செலுத்தக்கோரிய அவுஸ்திரேலிய உள்துறை

தோல்வியடைந்த இலங்கை தமிழ் அகதி

தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்வதை தவிர்க்க அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தோல்வியடைந்த இலங்கை தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு புதிய நெருக்கடி ஒன்றை அவுஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கிற்கான கட்டணமாக 9000 அவுஸ்திரேலிய டொலர்களை செலுத்தக்கோரியுள்ளது அவுஸ்திரேலிய உள்துறை. இதை அவர் செலுத்த தவறினால் தற்காலிக விசாவில் உள்ள அவர் மீண்டும் சிறைவைக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்த போது தற்கொலைக்கு முயன்ற செல்வராசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்த போதே நீதிமன்றத்தை அணுகிய செல்வராசா தன்னை சமூகத்திற்குள் விடுவிக்கக் கோரி இருந்தார். ஆனால், அவ்வழக்கில் அவர் தோல்வியடைந்து தடுப்பிற்கே மீண்டும் அனுப்பப்பட்டார். பின்னர், அவருக்கு தற்காலிக இணைப்பு விசாவை வழங்கிய அவுஸ்திரேலியா, சமூகத்தில் வாழ அனுமதித்தது. இந்த சூழலில், வழக்கிற்கான கட்டணம் அவருக்கு புதிய ஒரு நெருக்கடியை அவுஸ்திரேலிய அரசு உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இவருக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்ட நிதி திரட்டும் செயல்பாட்டின் மூலம் அக்கட்டணத் தொகை திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News