இலண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு

315 Views

இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த

இலண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheathபகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள்  இரண்டு பெண்களையும் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டுள்ளனர். எனினும் அவர்கள் பின்னர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றன.

தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிய ஒருவர் கால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply