06 பேருடன் கடற்படை படகு காணாமல் போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிப்பு

259 Views

கடற் பிராந்தியத்தில் சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு மாலுமிகளைக் கொண்ட சிறிய ரக படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேல் காணாமல் போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த கடந்த 16ஆம் திகதி தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த போது, 17ஆம் திகதி முதல் அவர்களின் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மாலுமிகள் தெற்கு கடற்படை கட்டளையில் இணைக்கப்பட்டவர்களென கடற்படை  தெரிவித்துள்ளது.

கடற்படையினர் இதுவரை விமானப்படையினரின் உதவியுடனும் கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போதிலும், இந்தக் குழுவோ அல்லது படகோ கண்டுபிடிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனினும் அவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தொரடர்வதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Leave a Reply