இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்

sri lanka இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்

வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்: இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இரண்டுநாள்  பயணத்தின்  போது பலதரப்பட்ட விடயங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், பௌத்த மதம் தொடர்பிலான பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tamil News