இலங்கையில் ஜூலை, ஓகஸ்ட் மாதம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ரணில் எச்சரிக்கை

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும்

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும்

உலக உணவுத் தட்டுப்பாட்டுடன் இலங்கையிலும் பாரிய உணவுத் தட்டுப்பாடு  ஏற்படக் கூடும் என முன்னாள் பிரதமரும்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழும்பு, காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அவர்,  “மே மாதத்துடன்  இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்? ஜூன் மாதத்தில்  தனியார் துறைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்.  ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்”, என்று தெரிவித்துள்ளார்.

தீவிரமான அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் இலக்கில் இளைஞர்களின் போராட்டம்  முன்னெடுக்கப் படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.