பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த பிரதிவாதிக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



