சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று இலங்கை பேச்சு வார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் (IMF) இடையிலான கலந்துரையாடல் இன்று அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் ஆரம்பமாகிறது.

IMF உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ம் திகதி வரை நடைபெறும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் IMF அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரி, பிசி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம் சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாகப் பெறவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News